மாநில / மண்டல உயர் அதிகாரிகளின் கனிவான பார்வைக்கு !
பாரதப் பிரதமரின் அரசுத் துறை வாரியான செயலர்களுடன் கூட்டம் கடந்த 4.6.2014 இல் புது டெல்லியில் நடைபெற்றது . இந்தக் கூட்டத்தில் பொது மக்கள் சேவையை திறம்பட கையாளுவதற்கான வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டன . இந்தக் கூட்டத்தின் முடிவுகளை அமல் படுத்தும் விதத்தில் நம்முடைய துறை முதல்வர் மதிப்புக்குரிய MS . காவேரி பானர்ஜி அவர்கள் மாநில அஞ்சல் துறை தலைவர்களின் நேரடி பார்வைக்கு D.O. கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் மிகத் தெளிவாக " IDENTIFY AND DISCONTINUE REPORTS FROM OPERATIVE OFFICES AND DIVISIONS WHICH ARE NO LONGER RELEVANT FOR WHICH INFORMATION IS ALREADY AVAILABLE IN YOUR CIRCLE / REGIONAL OFFICE OR ON THE WEB ' என்கிற அறிவுறுத்தலை அனைத்து மாநில அஞ்சல் நிர்வாகங்களுக்கும் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையில் ஏற்கனவே நம்முடைய தோழர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் , குறிப்பாக தென் மண்டலத்திலும் , மேற்கு மண்டலத்திலும் இது போன்ற தேவையற்ற செயல்கள் கடைப்பிடிக்கப் பட்டு வருவதாகவும் ஏற்கனவே மண்டல அலுவலகத்தில் / கோட்ட அலுவலகத்தில் உள்ள விபரங்களை , அவர்களால் ON LINE இல் எடுக்கக் கூடிய , அல்லது ஏற்கனவே அவர்களுக்கு வேறு விதத்தில் - ஏற்கனவே உள்ள கோப்புகளில் இருந்து - கிடைக்கக் கூடிய விபரங்கள் குறித்த REPORTS களை மீண்டும் மீண்டும் காலை , மதியம், மாலை, இரவு என்று கேட்டுக் கொண்டே இருப்பதாகவும் அப்படி .உடனே அனுப்பப் படவில்லை எனில் அதற்கு விளக்கம் அளித்திட , பொது மக்கள் சேவையை உடனே நிறுத்தி விட்டு மண்டல அலுவலகத்திற்கு சம்பத்தப் பட்ட ஊழியர் நேரே வந்து அங்கு உள்ள குட்டி அதிகாரிகளிடம் விளக்கம் எழுதிக் கொடுக்கவேண்டும் என்று தொலைபேசியில் மிரட்டப் படுவதாகவும் புகார் அடிக்கடி வந்து கொண்டுள்ளது.
இது தவிர , மண்டல அலுவலகத்தில் உள்ள குட்டி அதிகாரிகள், IP /ASP இன் T.A. பில்கள் கோட்ட அலுவலகத்தில் PASS செய்வதில் பிரச்சினை உள்ளதாக புகார் வந்தால்கூட , அதனை PASS செய்திடும் கோட்ட அதிகாரியிடம் விளக்கம் கேட்காமல் , OA , ACCOUNTANT , MTS , ORDERLY , OUTSIDER என, சம்பந்தம் இல்லாத ஊழியர்களை = விளக்கம் அளித்திட நேரில் மண்டல அலுவலகம் வரச்சொல்லி தொலைபேசியில் மிரட்டுவதாகவும் "இல்லையென்றால் தொலைத்துவிடுவேன்" என்று கூறி 'ஆட்டம்' போடுவதாகவும் புகார்கள் வந்துள்ளன .
ஏற்கனவே HEAD OF OFFICE பணியில் இருக்கும் போது , ஏற்கனவே HEAD OF DIVISION /DISC AUTHORITY பணியில் இருக்கும் போது , அடிப்படை சட்ட விதிகளின் படி (STATUTORY RULES ) அவர்களுக்கு உண்டான அதிகார எல்லையை தாண்டி மண்டல அலுவலகத்தில் உள்ள குட்டி அதிகாரிகள் தானே PMG என்று நினைத்துக் கொண்டு 'ஆட்டம்' போடுவதாகவும் தொடர்ந்து புகார்கள் நமக்கு வந்துகொண்டுள்ளது.
இலாக்கா முதல்வர் அவர்களே "தேவையற்ற வேலைகளை குறையுங்கள்", "நிர்வாகத்தை ஒழுங்காக நடத்துங்கள் " என்று அறிவுறுத்தும் போது , குட்டி அதிகாரிகளின் 'ஆட்டம்' தேவைதானா என்பதை உயர் அதிகாரிகளின் பார்வைக்கே அளிக்கிறோம். இந்த மாதிரியான நடவடிக்கைகள் உடன் நிறுத்தப் பட வேண்டும் , இல்லையென்றால் அந்த குட்டி அதிகாரிகளின் பெயர் குறிப்பிட்டு , அந்த நிகழ்வு குறிப்பிட்டு , சம்பத்தப் பட்ட ஊழியர்களின் புகார் கடிதத்துடன் உடன் நமது அகில இந்திய பொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் அவர்களுக்கு சரியான விபரத்துடன் புகார் அளிக்கப் பட்டால்அதனை நேரடியாக SECRETARY POSTS அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் நமக்கு உறுதி அளித்துள்ளார். பாரத பிரதமரின் அலுவலகத்திற்கும் இது குறித்து புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் கூறியுள்ளார்.
எனவே மாநில / மண்டல அதிகாரிகள் இந்த பிரச்சினையில் உடன் தலையிட்டு குட்டி அதிகாரிகளின் இந்த "அடாவடி" நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திட பணிவுடன் வேண்டுகிறோம். நிச்சயம் இலாக்காவின் விதிகள் பாதுகாக்கப்படும் . முறையாக அந்தந்த நிலை அதிகாரிகளின் நிர்வாக எல்லை பாதுகாக்கப்படும் என்பதை உறுதி செய்திட பணிவுடன் வேண்டுகிறோம். மேல் நடவடிக்கையை அவசியம் எதிர்பார்க்கிறோம்.
இலாக்கா முதல்வரின் கடித நகலை கீழே பார்க்கவும் :-
No comments:
Post a Comment