அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Wednesday, 25 March 2015

வெல்லட்டும் 26.03.2015 வேலை நிறுத்தம் வெல்லட்டும்


அன்பார்ந்த தோழர்களே !

                தமிழகத்தில் .குறிப்பாக தென் மண்டலத்தில் அதிகாரவர்க்கம் தன் இஷ்டம் போல் உத்தரவுகளை போடுவதுவாடிக்கையாகவும்    .அதை அமுல்படுத்தாத  அதிகாரிகளுக்கு தனி கடிதம் எழுதி மிரட்டுவது என்பதில் ஆரம்பித்து இன்று உச்ச கட்டமாக எந்த மேல் முறையீட்டு மனுக்களுக்கும் நியாயமான முடிவுகளை வழங்காமல் ஊழியர்களை வதைப்பதில் தனி சுகம் அடைந்து வருகிறது .குறிப்பாக 

* டெலிவரி PERFORMANCE சரியில்லை என்று சொல்லி SPM தோழர்களை மண்டல அலுவலகத்திற்கு வர சொல்லி காலை முதல் மாலை வரை வெட்டியாக காக்க வைத்து விட்டு அனுப்புவது -இந்த கலாசாரமும் மதுரையில் தான் முதலில் தொடங்கியது .
* கோட்ட /மண்டல அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை சனிக்கிழமைகளில் கட்டாயமாக வரவழைத்து ,வரவழைத்து இன்று சனிக்கிழமை என்பதை இழந்து தவிக்கும் ஊழியர்கள் 
*Rule 16 வழக்கில் அப்பில் செய்யாவிட்டாலும் தானாக ரிவி வ் செய்து தண்டனைகள் அதிகரித்து மகிழுவதும் மதுரையில் தான் .
      
               மதுரையில் கெடுபிடிகள் அதிகரிக்க ,அதிகரிக்க கோட்ட அலுவலகத்திலும் கெடுபிடிகள் அதிகரிக்க தொடங்கின .எதற்கு எடுத்தாலும் விளக்க கடிதம் ,ஷோ காஷ் நோட்டீஸ் கொடுப்பது .ஆய்வுக்கு செல்லும் இடங்களில் ஊழியர்களை ஏக வசனத்தில் திட்டி தீர்ப்பது .எத்தனை மணி என்றாலும் CBS அலுவலகத்தில் எட்டி பார்க்க மறுக்கும் கோட்ட நிர்வாகம் 

 PMG /DPS   REVIEW  மீட்டிங்கில் SSP /SP களை  வறுத்து எடுப்பதும் .அதே வேகத்தில் கோட்டத்திற்கு வந்து  SSP /SP கள் நமது ஊழியர்களை வாட்டி வதைக்கும் நிலையும் நீங்க வேண்டும்  

       இரண்டு எஜமானுக்கு ஒருவன் வேலை செய்ய முடியாது ,அப்படி செய்தால் ஒருவனை பற்றி கொண்டு ஒருவனை அசட்டை செய்வான் இது பைபிள் வாசகம் --அனால் CBS அலுவலகத்தில் பல எஜமானுக்கு கீழ் நாம் பணியாற்ற வேண்டிய அவல நிலை 

இந்த கொடுமைகளில் இருந்து விடுபட தோழர்களே ! வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வோம் 

 

TN NFPE COC INTENSIFYING THE ONE DAY STRIKE THROUGH OUT TAMILNADU CIRCLE ON 26.03.2015

அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப்  போராடாது  
அநீதி களைய முடியாது !
வெல்லட்டும் !  வெல்லட்டும் ! 
தமிழகம் தழுவிய NFPE  சங்கங்களின் 
26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !

No comments:

Post a Comment