அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Tuesday, 8 July 2014

GREAT SUCCESS TO THE EFFORTS OF OUR CIRCLE UNION -A SIGH OF RELIEF TO ALL CBS OFFICES - EOD WILL BE GIVEN AT CPC

EOD  கொடுக்க  இரவு பகலாக காத்திருக்கும் கொடுமையிலிருந்து  மாநிலச் சங்கத்தின் முயற்சியால்  விடுதலை !   


VALIDATION கொடுத்த பிறகு 
இனி EOD( IInd and  III rd step) என்பது C P C  CHENNAI  யிலேயே கொடுக்கப்படும் ! இது நமது  இடை விடாத முயற்சிக்கு கிடைத்த வெற்றி !

ஏற்கனவே 23.06.2014 அன்று  நடைபெற்ற  நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியின் போது   CPMG , TN  அவர்களால் கொடுக்கப் பட்ட உறுதியினை நாம் நமது வலைத்தளத்தில் ஏற்கனவே பிரசுரித்திருந்தோம் என்பதை   மீண்டும் சரி பார்க்கவும்.  EOD  கொடுப்பது என்பது ஒரு வார காலத்தில்  CPC  இலிருந்து  கொடுத்திட ஏற்பாடு செய்யப்படும் என்ற உறுதியே அது. ! 

தற்போது அந்த உறுதி மொழி   இன்று முதல் (05.07.2014)  அமலுக்கு வந்து விட்டது .  அனைத்து  தோழர்/ தோழியர்களுக்கும் தெரிவிக்கவும் ! இன்றைய நாளை  விடுதலை நாளாகக் கொண்டாடவும் ! 

நம் வேண்டுகோளுக்கு இணங்க  உடன் இலாக்காமுதல்வர் அளவில்சென்று நடவடிக்கை எடுத்த  CPMG  TN திரு.T. மூர்த்தி அவர்களுக்கு  நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி. !  

நாம் அளித்த பிரச்சினையை உடன்  துறை முதல்வர் அவர்களிடம் எடுத்துச் சென்ற நம்முடைய பொதுச் செயலர் தோழர். M . கிருஷ்ணன் அவர்களுக்கும் , இந்தப் பிரச்சினையில் அதிக ஆர்வமுடன்  ஈடுபட்டு தீர்வுகாணஉதவிய  நம்முடைய  துணைப் பொதுச்  செயலாளர் தோழர். N . சுப்ரமணியன் அவர்களுக்கும் நம்  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி !

மேலும் ஒரு  செய்தி !  

தற்காலிகமாக இந்தப்பிரச்சினைகள் தீரும் வரை ஒரு மாத காலத்திற்கு புதிய அலுவலகங்கள் MIGRATION  செய்வது நிறுத்தப் பட்டுள்ளதாக நிர்வாகத்தில் இருந்து நமக்கு தகவல் வந்துள்ளது !  இதுவும் நமது கோரிக்கையே ! 

உடன்  புதிய  அலுவலகங்கள்  MIGRATION நிறுத்தப் பட வேண்டும் என்று நாம் நமது கடிதத்தில் கூறியிருந்ததை உங்கள் நினைவுக்கு திரும்பவும் கொண்டு வருகிறோம்.நாளும்  துன்பத்தில் உழன்ற நம்முடைய தோழர்களுக்கு இந்த செய்திகள்  நிச்சயம்  பெரும் மகிழ்ச்சியை தரும் என்பதில்   நமக்கு  ஐயம் இல்லை !  

வாழ்க NFPE  !  வெல்க நம் ஒற்றுமை !
=============================================

No comments:

Post a Comment