"கருவாடு விற்ற காசு நாறுமா ?
நாய் விற்ற காசு குரைக்குமா ?"
e post நம்முடைய துறையில் அறிமுகப் படுத்தப் பட்டதன் நோக்கம் குறித்து நம்முடைய இலாக்காவின் வலைத்தளத்தில் இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது:-
"The internet revolution has allowed rapid exchange of communication through email. However, the internet has not reached most of the rural India and other remote areas. To bridge this digital divide, and to bring the benefit of the revolutionary internet technology to people living in these areas, Department of Posts has introduced epost. ePOST enables customers to send their messages to any address in India with a combination of electronic transmission and physical delivery. ePOST sends messages as a soft copy through internet and at the destination it gets delivered to the addressee in the form of hard copy."
"அதாவது இன்டர்நெட் புரட்சியின் அதிவேக செய்திப் பரிமாற்ற வளர்ச்சியே e mail என்பது. இந்த வசதி இந்திய நாட்டின் கடைக்கோடி கிராமங்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை. இந்த ஏற்றத் தாழ்வை சரி செய்து நாட்டின் அனைத்து பகுதியில் உள்ள மக்களும் பயன்பாடு பெரும் வகையில் இந்திய அஞ்சல் துறை e post என்னும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அவர்கள் அனுப்பும் EMAIL செய்தியை மக்களின் வீடு தேடி HARD COPY யாகவே பட்டுவாடா செய்திடவே இந்த சேவை "
நம்முடைய இலாக்காவின் மற்றும் அரசின் நோக்கம் இவ்வாறு இருக்க, இந்த வசதியை அதுவும் குறைந்தபட்ச கட்டணமான ரூ.10/-இல் நாட்டின் ஒரு கோடியில் இருந்து மறுகோடிக்கு இரண்டு மணி நேரத்தில் கூட HARD COPY யாக (PRINT OUT) நேரிடையாக விலாசதாரரின் வீட்டிற்கே சென்று பட்டுவாடா செய்ய முடியுமானால் , இதை விட சிறந்த திட்டம் எதுவும் இருக்க முடியாது.
மேலும் வணிக ரீதியாக பார்த்தாலும், இந்த சேவைக்கு இதுவரை போட்டியாளர் (COMPETITOR) என்பதே சந்தையில் இல்லை என்பது மிக முக்கியமானதாகும். வேறு எந்த தனியார் நிறுவனங்களுக்கும் இந்த அளவுக்கு NETWORK இல்லை என்பதும் நமது துறையின் சிறப்பு ஆகும்.
காலை ஏழு அல்லது எட்டு மணிக்கு EPOST BOOK செய்து TRANSMIT செய்தால் காலை 10.00 மணிக்குள் இந்திய நாட்டின் எந்த ஒரு மூலையிலும் HARD COPY PRINT OUT செய்து தபால்காரரிடம் உடன் பட்டுவாடாவிற்கு ஒப்படைக்க முடியும். அவரும் ஓரிரு மணி நேரத்தில் விலாசதாரரின் வீட்டிற்கே சென்று பட்டுவாடா செய்திட முடியும்.
ஆனால் இதற்கான அடிப்படை கட்டுமான வசதி (INFRASTRUCTURE ) நம்மிடம் சரியாக இருக்க வேண்டும். ஓட்டை உடைசல் கணினி , பழுதடைந்த பிரிண்டர் , சுற்றிக்கொண்டே இருக்கும் SIFY NETWORK என்று இருந்தால் 'கதை கந்தல்தான்' .
எப்படியிருந்த போதிலும் போட்டி இல்லாத INNOVATIVE ஆக அறிமுகப் படுத்தப் பட்ட வியாபாரத்தில் சரியான திட்டமிடுதலும், சரியான புரிதலும், தேவையான அடிப்படை வசதிகளும் இருந்தால் பொது மக்களுக்கும் நன்மை, நமது துறைக்கும் அதிக லாபம் . இந்த வழியில் எந்த அதிகாரிகளும் சிந்திப்பதே இல்லை என்பது கொடுமையே !
ஆனால் இலாக்காவின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் , அரசின் அற்புதமான திட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில் நம்முடைய கீழ் மட்ட அதிகாரிகள் செய்யும் கோமாளித்தனம் எல்லை மீறியே நடந்து வருகிறது . இதை யெல்லாம் மேல் மட்ட அதிகாரிகள் கவனிக் கிறார்களா அல்லது அவர்களும் இந்த நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்களா என்பது நமக்குப் புரியவில்லை.
தற்போது நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்கு EPOST "புடிக்கச் சொல்லி " கட்டளைகள் பறந்த வண்ணம் உள்ளதாக நமது கோட்டச் செயலர் களிடம் இருந்து தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன . அப்படி "புடிக்க" முடியாவிட்டால் ஒவ்வொரு GDS, தபால் காரர் மற்றும் POST MASTERகளும் ஆளுக்கு 10 EPOST வீதமாவது கொடுக்க வேண்டும் என்று கட்டளை வேறு. இதுதான் "தன் சதையையே கடித்து தன் பசி ஆறுவது" என்பது.
சிறந்த திட்டத்தை சீரழித்து " சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது " என்று கூட சொல்லலாம். இப்போது சூரியா, அப்புறம் விஜய் ,பிறகு நயன்தாரா ... கடைசியில் "ஷகிலா" என்று பிறந்த நாளுக்கு ePOST பிடிக்கச் சொல்வார்கள் போலிருக்கிறது. ரசிகர் மன்றமும் வைக்கச் சொல்வார்கள் போலிருக்கிறது .
"நிச்சயம் கருவாடு விற்ற காசு நாறாது ...
நாய் விற்ற காசு குறைக்காது" ...
மேல்மட்ட அதிகாரிகள் சிந்தித்து நாம் சொல்வதில் உண்மை இருந்தால் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகிறோம் !
இலாக்காவின் திட்டங்களின் நோக்கத்தை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு கிறோம்.
இலாக்காவை சீரழிக்கிற அதிகாரிகளுக்கு கடிவாளம் இட வேண்டுகிறோம்.
செய்வார்களா? செய்வார்களா ?
No comments:
Post a Comment