அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Saturday, 31 January 2015

HASTHAMPATTI Sub Post Office is the only Post Office where the Father of Our Nation MAHATMA GANDHIJI stayed on 14.02.1934.

HASTHAMPATTI HSG I POST OFFICE , Tamilnadu State

A MARK OF PRIDE

                We, the staff of Hasthampatti Sub Post Office feel proud in working at this SO because of the fact - this Sub Office is the only Post Office where the Father of Our Nation MAHATMA GANDHIJI stayed on 14.02.1934 during his visit to Salem.   At that time this building was owned by the Landlord  Shri. V.NATESANPANDARAM where BAPUJI stayed as guest.


P&T Department acquired this building for Hasthampatti Post Office and opened a museum at this PO on 30.01.1997 in memory of Mahatma Gandhiji’s stayal at this building.   In serene atmosphere, the room in which Gandhiji stayed is converted as Mahatma Gandhi Philately Museum which creates positive vibrations and echoing the ideals of Gandhiji.   The Easy Chair, Khadi Spinning Wheel (Chakra) and materials used by Mahatma are adorned as treasure in this  shrine which gives the feel of living Mahatma.   The cancellation dated 30.01.1997 depicts Spinning Wheel (Chakra) and text ‘Bapu’ in Tamil and Hindi.   Philatelic stamps, first day covers, stationery issued by India as well as other countries are in display.


Rare collections of Photos and thought provoking slogans displayed are highly impressive and pave the way to lead an excellent life with Ahimsa by utmost discipline.
While entering  the museum we feel as if we are living with Gandhiji and speaking with him which churns inner feelings.   Where is Rama there is Ayothi.  Likewise Gandhiji’s stayal made this Hasthampatti Post Office as Porbandhar. Though very small, the status of  the contents are very high and holy.  School children visit this Museum with eager where they understand the life of Gandhiji  is a Message to Mankind.


Bapuji’s saying “Customer is our Boss’ is apt slogan for every walk of our official career.
It is the special wonder of the world, NONE but only one Simplest Mahatma Gandhiji conquered the Rich Rulers and hearts of entire world by patience, perseverance and Ahimsa.


Source : http://nfpesalemeast.blogspot.in/

Swachh Bharat cess is likely to be imposed by way of a Service Tax amendment in the forthcoming Annual Budget

New Delhi: A Swachh Bharat cess is likely to be imposed by way of a Service Tax amendment in the forthcoming Annual Budget.

According to sources, The Finance Ministry proposes Swachh Bharat cess seeking Rs 1 lakh crore for Swachh Bharat Mission.

The government hopes to mop up Rs 1 lakh crore in five years. Service Tax amendment is likely to take place in the Budget Session.

The Swachh Bharat cess may range between 0.02 to 0.05 per cent. The cess is likely to be levied on telecom SVCs and spectrum sale.

The government mulls imposing cess on all services under service tax regime. It will be levied for a specific purpose for procuring machinery.

The cess may be used for cleanliness and infrastructure development also. It is likely to be added to Swachh Bharat Kosh and the collection will be disbursed to the states, the sources said.

Source : http://ibnlive.in.com/

Thursday, 29 January 2015

குமரிக்கோட்ட அஞ்சல் மூன்று மாநாடு 01-03-2015


அன்பார்ந்த தோழர்களே!  தோழியரே!!
குமரிக்கோட்ட அஞ்சல் மூன்று மாநாடு 01-03-2015 அன்று நடைபெறுவதற்கான 
ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 
கோட்டத் தலைவர் மற்றும் செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் பெப்ருவரி  02 மற்றும் 03 ஆகிய தேதிகளில் கோட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உறுப்பினர்களை சந்திக்க உள்ளனர். அது சமயம் உறுப்பினர்கள் தங்களுடைய கோரிக்கைகளை தெரியப்படுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம். அத்துடன் மாநாட்டு நன்கொடை ரூ 200/ வழங்குமாறும அன்புடன் கேட்டுகொள்கிறோம் 

மாநாட்டு வாழ்த்துக்களுடன்,
P  ஜஸ்டின் ஜோஸ்                                                                     A  சுரேஷ் குமார் 
கோட்டத்தலைவர்                                                                  கோட்டச்  செயலர் 

Questions related to Sukanya Samridhi Yojana


Friends.. As you are aware Prime Minister Narendra Modi on 22 January 2015 launched a small deposit scheme Sukanya Samridhi Yojana for girl child under the Beti Bachao Beti Padhao (BBBP) campaign. In this post we are bringing you some probable questions that can be asked related to this Yojana in the upcoming exams.


1) Who can open account in the name of Girld Child under Sukanya Samridhi Yojana? -Guardian/Natural Guardian

2) A Guardian can open how many accounts under SSY? - Only one account in the name of one girl child and maximum two accounts in the name of two different girl children.

3) An account under SSY can be opened up to the age of ___ years only from the date of birth? -10 Years

4) Whether nomination facility is available for accounts under SSY? - No

5) Minimum amount for opening of SSY Account? - Rs.1000 (Subsequent deposit should be in multiple of Rs.100/-)

6) Maximum amount that can be deposited in a financial year in this account? - Rs.1,50,000

7) Whether there is any limit on the number of deposits? - No

8) What is the interest rate for the financial year 2014-15 under Sukanya Samridhi Yojana account? - 9.1%

9) Partial withdrawal, maximum upto 50% of the balance standing at the end of the preceding financial year can be taken after Account holder is attaining age of ___ years? - 18 Years

10) Sukanya Samridhi Account can be closed after completion of ___ years? - 21

11) If account is not closed after maturity, balance will continue to earn interest as specified for the scheme from time to time. State whether the statement is correct? - Yes


12) Normal premature closure will be allowed after completion of 18 years provided which condition? - Girl is married

Thursday, 22 January 2015

பெ ண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில்புதிய சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி அக்கௌன்ட் ( SSA ) மத்திய அரசு தொடங்குகிறது

        22.01.2015 முதல் அமுலாகிறது                       

1.10 வயது வரை உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்காக இந்த கணக்கு தொடங்கலாம் .
2.குறைந்தபட்ச முதலிடு ரூபாய் 1000
3.ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை சேமிக்கலாம் .
4.குழந்தையின் 21 வது வயதில் கணக்கை முடிக்கலாம் 
5.  Nomination வசதி கிடையாது .
6.ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூபாய் 1000 கண்டிப்பாக முதலிடு செய்ய வேண்டும் 
7இந்த ஆண்டு வட்டி 9 .1%



Launch of scheme for Girl Child named "Sukanya Samridhhi Account" by Hon'ble Prime Minister

Launch of scheme for Girl Child named "Sukanya Samridhhi Account" by Hon'ble Prime Minister
When Prime Minister Narendra Modi will launch 'Beti Bachao Beti Padhao' campaign at Panipat on January 22, he would also introduce an ambitious scheme 'Sukanya Samruddhi Account' to make girls financially empowered.
Modeled on the pattern of small savings schemes of the government, the Centre would offer high rate of interest for account holders under the new scheme. For the current financial year, this would work out to 9.1%. For the sake of simplicity, the manner of interest calculation would be similar to public provident fund (PPF).
Under the scheme, the account can be opened from the birth of the girl child till she attains the age of 10. A girl child who attained the age of 10 years, one year prior to notification, will also be eligible. The account can be opened by an amount of Rs 1,000 and in a financial year investment ceiling is Rs 1.5 lakh. The child can close the account earliest at the age of 21 years with option of keeping the account till marriage.
The exemption on investments made under the scheme will also be eligible for exemption under 80C of Income Tax Act, 1961.
To view Department of Economic Affairs OM No.2/3/2014.NS-II dated 20/01/2015 please click the link...
http://finmin.nic.in/the_ministry/dept_eco_affairs/budget/Sukanya_Samridhhi_Account.pdf

Friday, 16 January 2015

Directorate issued various orders for GDS on the basis of DKS CHAUHAN COMMITTEE RECOMMENDATIONS

GDS பதவிகளை நிரப்புதல் ,

Filling up of vacant posts of GDS Mailman.CLICK HERE

கருணை அடிப்படையில் வேலை வழங்குவதில் திருமணமான ஆண் மகனுக்கும் வாய்ப்பு 
Consideration of Married Son as dependent family member for the purpose of compassionate engagement to GDS posts CLICK HERE

Review of merit points under compassionate Engagement Scheme, under attribute ‘own agricultural land and house’ CLICK HERE


காலியாக உள்ள GDS பதவிகளை ஆறு மாதத்திற்கு ஒருமுறை முன்கூட்டி விண்ணபங்கள் பெறுவது ,
Revised selection process for engagement to all approved categories of GDS Posts.

ஒரு விண்ணப்பத்தில் 10 இடங்கள் வரை கேட்பது 
Revised eligibility criteria for engagement to GDS posts. CLICK HERE

GDS வேலை வாய்ப்பில் CASUAL ஊழியருக்கு முன்னுரிமை அளிப்பது 
Preference to casual labourers in the matter of engagement as Gramin Dak Sevaks – review thereof. CLICK HERE

RULE 9- ஐ திருத்தியமைத்தல் 
Review of Penalties specified in Rule 9 of GDS (Conduct and Engagement) Rules, 2011.

என முக்கிய உத்தரவுகளை  DKS சௌஹான் கமிட்டி பரிந்துரையின் படி அஞ்சல் வாரியம்   வெளியிட்டுள்ளது 

தை மகளே வருக ! தரணியெல்லாம் செழிக்க !!




Tuesday, 13 January 2015

TSR கமிட்டி சொல்லுவது என்ன ? விஷம் தடவிய இனிப்பா ?

  TSR கமிட்டி சொல்லுவது என்ன ? 

                                                      விஷம் தடவிய இனிப்பா ?

அஞ்சல் துறையில்  சேமிப்பு வங்கி ,இன்சூரன்ஸ் .பார்சல்கள் .இதர நிறுவன பில்கள் ,இதர அரசு பணிகள் இந்த ஐந்து சேவைகளையும் துணை வர்த்தக கம்பெனிகளாகவும் ,மீதி உள்ள மெயில் சேவையை மட்டும் ஹோல்டிங் கம்பெ னியாகவும்  மாற்ற TSR கமிட்டி பரிந்துரைத்துள்ளது .இந்த ஐந்து துணை கம்பெனிகளின் பணிகள் குறித்து இவ்வாறு பிரிக்க பட்டுள்ளது .

1. சேமிப்பு வங்கி 

                         சேமிப்பு வங்கி மற்றும் நிதித்துறை சேவைகள் இந்திய அஞ்சல் வங்கி என்ற அமைப்பின் கீழ் செயல்படும் .மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வங்கி கிளை என்பதாகவும் .இதர 140000 கிராமப்புற அஞ்சலகங்கள் மேற்கண்ட அஞ்சல் வர்த்தக உறவு கொண்டதாகவும் இருக்கும் .

2.PLI /RPLI 

ஆயுள் காப்பீடு துறை என்பது ஆயுள் இன்சூரன்ஸ் ,பயிர் இன்சூரன்ஸ்மருத்துவம் ,விபத்து இன்சூரன்ஸ் மற்றும் பொது இன்சூரன்ஸ் போன்றவற்றை உள்ளடக்கிய தனி வர்த்தக அமைப்பாக இருக்கும் .அதாவது PLI அரசு ஊழியர்களுக்கு மட்டும் என்பது மாறி அனைவருக்கும் விரிவு படுத்தப்படும் .

3.பார்சல் /விரைவு தபால்கள் 

                                 பார்சல் /விரைவு தபால்கள் .பாக்கெட்டுகள் மற்றும் பார்சல் /விரைவு தபால்கள் இ -வர்த்தக பிரிவு என்பது முழுவதும் பொதுத்துறை சார்ந்த வர்த்தக அமைப்பாக தனது சொந்த வர்த்தக அடையாளத்துடன் சர்வதேச அளவில் இதர   இ -வர்த்தக  நிறுவனங்களுடன் இனைந்து செயல்படும் 

4. இதர நிறுவனங்களின் சேவைகள்

                       இதர நிறுவனங்களின் சேவைகள் என்பது இதர நிறுவனங்களின் பில்களை வசூல் செய்தல்பட்டுவாடா செய்தல் ,வர்த்தக  ரீதியில்  அனைத்து துறைகளுக்கும் தகவல்களை அளித்தல் போன்ற மூன்றாம் நபர் பொருட்களை விநியோகித்தல் ஆகிய பணிகள் 

5. அரசு பணிகள் 
                         ஆதார் ,ரேசன் கார்டுதேசிய சேமிப்பு பத்திரங்கள் ,கிசான் பத்திரங்கள் ,விசாரணை மற்றும் சான்றிதழ் வழங்கும் சேவைகள் ,முறைபடுத் துத்தல்  ,மேற்பார்வை செய்தல் போன்றவை 

                         மேற்கண்டவாறு அஞ்சல் இலாகாவை ஹோல்டிங் கம்பனியாகவும் ,இதர சேவைகளை துணை வர்த்தக  கம்பனியாகவும் அமைப்பதற்கு  புதிய அஞ்சல் சட்டம் இயற்றப்படும் என்றும் இந்த குழு பரிந்துரைத்துள்ளது .
                         ...........               மெல்ல அஞ்சல் துறை இனி .... 

Wednesday, 7 January 2015

COLACHEL LSG SO - 629251 UNDER TN CIRCLE CBS GO LIVE 05/01/2015









Statistical details of offices migrated to CBS as on 05th Jan 2015




Statistical details of offices migrated to CBS as on 05th Jan 2015
Name of the Circle
HO migrated
SOs migrated
Total
Andhrapradesh
82
2
84
Assam
13
14
27
Bihar
1
0
1
Chhattisgarh
1
0
1
Delhi
9
40
49
Gujarat
4
0
4
Haryana
4
1
5
Himachal Pradesh
3
0
3
Jammu Kashmir
1
0
1
Jharkhand
8
0
8
Karnataka
58
222
280
Kerala
13
0
13
Madhya Pradesh
14
0
14
Maharashtra
55
59
114
North East
1
0
1
Odisha
13
1
14
Punjab
18
7
25
Rajasthan
48
221
269
Tamilnadu
94
289
383
Uttarakhand
1
0
1
Uttarpradesh
62
175
237
West Bengal
5
0
5
Total
508
1031
1539

Source : http://tamilnadupost.nic.in/sdc/

Monday, 5 January 2015

புத்தாண்டில் ஒரு சராசரி ஊழியனின் பார்வை ! - தமிழ் மாநில அஞ்சல் மூன்று இணையதளத்திலிருந்து


 அன்புத் தோழர்களுக்கு ! வணக்கம் ! நம்முடைய  இலாக்கா முதல்வர் அவர்கள் அனைவருக்கும்  இனிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியுடன்  2014 இல்  நம்முடைய கடின உழைப்புக்கான பாராட்டினையும்  தெரிவித் துள்ளார்கள் !  அவர்களுக்கு நம் அனைவரின் சார்பில் நம்முடைய நன்றி உரித்தாகட்டும் !

நடப்பு ஆண்டில் நம்  இலாக்காவின்  வளர்ச்சி, அதற்கான இலக்கு நிர்ணயம் அதன் தேவைகள் குறித்தும் , மாறி வரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்பவும் , புதிய வணிக வாய்ப்புகளுக்கு ஏற்பவும் நம்முடைய  திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவேண்டியிருப்பது குறித்தும்  தெரிவித்துள்ளார்கள்.  

இலாக்காவின் ஊழியர்கள் என்ற வகையில்,  நம்முடைய இலாக்காவின் வளர்ச்சியில்  நம் எல்லோருக்கும் நிச்சயம்  அதற்கான  கடமை உள்ளது. மிக அதிக அளவில் நம் பங்கும் அதில் உள்ளது.  நம் இலாக்காவே நம் அனைவரின் வாழ்வாதாரம் . நிச்சயம் அந்த திசை நோக்கி நாம் செயல்படுவோம் என்று  உறுதி கூறுகிறோம்.

ஆனால்  அதற்கான அடிப்படை  தேவைகள் குறித்தும்  நிர்வாகம்  தன்  பார்வையை செலுத்த வேண்டியுள்ளது என்பதை  இந்த  நேரத்தில் நாம்  பதிவு  செய்கிறோம். நம்முடைய ஊதிய  உயர்வு , பஞ்சப்படி இணைப்பு போன்ற கோரிக்கைகளை இலாக்காவிடம்  நாம்  வலியுறுத்தவில்லை. அதற்கான  அரங்கு என்பது  வேறு. மத்திய  அரசின்  பார்வையில் அதிகாரிகள் உள்ளிட்ட,  அனைத்து மத்திய அரசு ஊழியர்கள்  சார்பாக  அதனை  நாம்   கொண்டு செல்கிறோம்.  

ஆனால்  நம்முடைய  இலாக்காவில் , நிர்வாக கட்டமைப்பிற்கு ஒரு திசைப் பார்வை மட்டுமே  உள்ளது  என்பதே  நம் ஊழியர்களிடம்  உள்ள  மனத் தாங்கல். அதனை  இந்தப் புத்தாண்டில்  தெரிவிக்க வேண்டிய  கடமை  நமக்கு உள்ளது.

உதாரணமாக 

இலாக்காவின் தகவல் தொழில் நுட்ப மேம்பாட்டுக்கு  ரூ. 4909/- கோடியை 
ஒதுக்கியது  மத்திய அரசு. அதில்    ஒரு     பைசா கூட  நம்முடைய  தகவல் 
தொழில் நுட்ப  அடிப்படை கட்டுமானத்திற்கு அளிக்கப்படவில்லை என்பது வேதனை அல்லவா ? 

2000 - 2004 களில் அளிக்கப் பட்ட காலாவதியான கணினிகள் , PRINTER கள் , UPS - BATTERY கள் , BAR CODE  SCANNER கூட இல்லாத அலுவலகங்கள் -இதனை வைத்துக் கொண்டு "நொண்டிக் குதிரையில் ஏறி டெல்லிப் பட்டினம்போ" என்று விரட்டுவது வேடிக்கையான விஷயமில்லையா?  உடனே பரிசீலிக்க வேண்டிய  ஒரு  அத்தியாவசியமான அவசர அவசியம்  இல்லையா ?   

TECHNOLOGY TRANSFER  என்ற வகையில் மென்பொருள்  அளிப்பதற்கே  ரூ.4909 கோடி பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது சரிதானா ? 

அதுவும் நமது துறைக்கென்று பிரத்தியேகமாக ,  அதன் சட்ட விதிகள் , 
சேமிப்பு வங்கி தொடர்பான நம்முடைய  இலாக்காவின்  தனித்துவமான திட்டங்கள் , காப்பீட்டுப் பகுதியில்  நம்முடைய  இலாக்காவின் தேவைகள்  குறித்தெல்லாம் முறையான ஆய்வு செய்து  அதற்கான  மென்பொருள்  வடிவமைத்துப் பெறாமல் , எவருக்கோ செய்த  காலணியை  நாம் மாட்டிக் கொள்வதற்கு "நம்முடைய  பாதங்களை வெட்டுவது போல"  இன்று  இந்த திட்டங்கள்  நடைமுறைப்படுத்தப்படுவது சரிதானா ? 

இதுபோலத்தான் ,  MAIL OPERATION, FINANCE & ACCOUNTS,  RETAIL OPERATION, RURAL ICT, HR  போன்ற பகுதிகளிலும்  தனித்துவமான  மென்  பொருள் பெறாமல்   வேறு எவருக்கோ செய்தது நமக்கு வழங்கப்படுமா ?

இதனையெல்லாம் சரி செய்திட வேண்டிய கடமை உள்ள, அதற்காக ஒப்பந்தங்கள் போட்டு  (2 YEARS FOR IMPLEMENTATION , 5 YEARS FOR MAINTANANCE) பல நூறு கோடிகள் வாங்கிய நிறுவனங்கள் , பிரச்சினைகளை தீர்த்திட களத்தில் இல்லாமல் ஓடிப் பதுங்குவதும்,   நம் அப்பாவி  ஊழியர்கள்  பிரச்சினைகளைத் தீர்த்திட ' இரவு பகலாக " களத்தில் வேலை செய்ய வேண்டி உள்ளதும்  சரிதானா ? 

"இட்லி   திங்கச் சொன்னது ஒருத்தனையாம்  - ஏப்பம் விடச்சொன்னது இன்னொருத்தனையாம் " என்ற  கிராமத்து பழமொழி இதற்காகத்தான்  வந்ததோ ? 

தினந்தோறும்  எத்தனை எத்தனை  பிரச்சினைகள் ? "கழுதை முதுகில் வைத்த சுமை போல"  எல்லாம் பழகினால் சரியாகிவிடும் என்பதும் சரிதானா ? 

எந்த அளவு "அலைக்கற்றை பரிமாணம் " தேவை என்று கூட அறியாமல் LAPTOP  இல் போடும்  DATA  CARD  க்கு உண்டான  256 KBPS /512 kbps BANDWIDTH  மட்டும்  பெற்று அதில் "மின்னல் வேகத்தில் TRANSACTION"  என்று வெறும்  "அச்சு மற்றும் மின்னணு  ஊடகங்களுக்கு  பேட்டி கொடுப்பது" சரிதானா ?

NET WORK CONNECTIVITY  இல்லாததால் TRANSACTION  செய்திட இயலாமல்  பொதுமக்களிடம்  அடிவாங்கும் அளவுக்கு ஊழியர் அவதியுறுவது தெரியாதா ? எத்தனை ஊரில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டது ?  இது  தெரியவே தெரியாதா ?

இப்போது மேம்படுத்தப்பட்டு விட்டது  என்று இன்னமும் நாம் 'பொய்' கூறிக் கொண்டுதானே   உள்ளோம் ?  பல நாட்கள்  'HANG  OVER ' இல் ஊழியர்படும் அவதி , மறுநாள்  மறந்து விடும் என்று சமாதானம் செய்தால்,  பொது மக்களும்  அப்படியே  சமாதானமாகி விடுவார்களா ?

பல நூறு கோடிகள்  கொடுத்து ஒப்பந்தம் போடும் முன்னரே உரிய தொழில் நுட்ப   மற்றும்  துறை சார் அறிவு கொண்ட  அதற்கான  வல்லுநர் குழு அமைத்து அனைத்து  பகுதிகளையும் ஆய்வு செய்து ஒப்பந்தங்கள் போட வேண்டாமா ?  ஏனோ தானோ வென்று  ஒப்பந்தங்கள் போடப்பட்டு , அதன் பாதிப்புகள் அனைத்தையும்  அடிமட்ட தொழிலாளி தலையில் கட்டி " ஓடு  ஓடு"  என்றால் எப்படி  ஓடுவது  என்று  சிந்திக்க வேண்டாமா ?  

இத்தனைக்கும்  நம் எழுத்தரின் அடிப்படை கல்வித்தகுதி +2 தானே ?  மேலும் அதில் பாதி பேர் ,  பழைய  8TH  STANDARD  QUALIFICATION இல் தேர்வு செய்யப்பட்டு தபால்காரராக /MTS  ஆக பணியாற்றி  பதவி உயர்வு பெற்ற  எழுத்தர் தானே ?  இவர்கள்  ஒரே நேரத்தில்  58 SOFTWARE  நம் துறையில் HANDLE  செய்யும் அளவு  அறிவு பெற்றவர்களா ? 1200 SCREEN SHOT   நினைவில் கொள்ளும் வண்ணம்  தொழில் நுட்ப  அறிவு மேம்பட்ட  தகவல் தொழில் நுட்பத்  துறையில்  உயர் கல்வி பெற்றவர்களா ?  இருந்தும்  இத்தனை பல்நோக்கு உள்ள அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள் என்பது உலகிலேயே எந்தத் துறையிலும் இல்லாத  புதுமை  இல்லையா ?  இது குறித்து என்றாவது , எவராவது  ஒரு வரி பாராட்டியது உண்டா ?  பாராட்டு கூட  ஒரு "ஊக்க மருந்து"  தானே ?

வேறு எந்த மத்திய அரசுத் துறையிலாவது  ஒரே நேரத்தில் 58 SOFTWARE கணினிகளில்  பயன்பாட்டிற்கு உள்ளதா ?  ஏன் ?   தொழில் நுட்ப முதுகலைப் பட்டம் அல்லது  தொழில் நுட்ப பொறியாளர் பட்டம் பெற்ற  உயர் கல்வி பெற்றவர்கள் பணி புரியும் MNC  க்களில் கூட இத்தனை  SOFT  WARE  ஒரு ஊழியர்  கையாள்கிறாரா  ?  இல்லையே !

இவ்வளவு  ஊழியம்  செய்தும், அதுவும் INITIALISATION காலத்தில்  'TRANSITION'  காலத்தில்,  ஊழியர்  தம் பணியில் ஒரு சிறு தவறு செய்தால் கூட, அதனை தொழில் நுட்ப ரீதியாக  சரி செய்திடும்  விபரம் கூட  சிறிதும் தெரிந்துகொள்ளாத சில  கீழ்மட்ட அதிகாரிகள் , தனக்கு "RULE  16 போடுவது தவிர வேறு எதுவும் தெரியாது" என்ற வகையில்  ஊழியர்களை தினம் தினம் பழிவாங்கும் போக்கு  மிகவும் அதிகமாகி உள்ளதே ? அது உங்களுக்கு தெரியுமா ?  பல இடங்களில் கூக்குரல் கேட்கிறதே ? அது உங்களுக்குப் புரியுமா ?

BUSINESS  DEVELOPMENT  கூட்டங்களில்  வெறும் TARGET  பற்றி மட்டும் பேசினால் , அதனை சாதிக்க வேண்டிய அடிமட்ட ஊழியர்  சரியான  WORKING  ENVIRONMENT  இல்லாவிட்டால்  எவ்வாறு சாதிப்பான் என்பது குறித்து  ஆய்வு செய்வது கிடையாதா ? 

வணிக வளர்ச்சி,  மாத  இலக்கு என்ற பெயரில்  'MULTI  LEVEL  MARKETING  COMPANY " கள்  போல "உன் பெண்டாட்டி பேரில்  100 RD கணக்கு" , "பிள்ளை  பேரில் 100 RD கணக்கு" , அடுத்த PREMIUM  மே  கட்டாத  "'பினாமி "  RPLI  பாலிசிகள்  GDS  ஊழியர் சம்பளத்தில் போடு" என்று வணிக  யுக்தியே  சிறிதும் தெரியாத சில  கீழ்மட்ட  அதிகாரிகளின்   தினசரி  நடவடிக்கைகள்  நம் துறையை நிஜமான  வளர்ச்சி  பெற  வைக்குமா ?  வீழ்ச்சி பெற வைக்குமா ? இது குறித்து  சிந்திக்க  வேண்டாமா ? வணிக வளர்ச்சி கூட்டங்களில் பேசுவது உண்டா ? 

EPOST  சேவை எதற்காக துவங்கப்பட்டது என்பதே தெரியாமல், போட்டியில்லாத , எவருமே போட்டியிட முடியாத  இந்த சேவைப் பகுதியை எவ்வாறு விரிவாக்கம் செய்வது என்பது  கூட தெரிந்துகொள்ளும்  அடிப்படை அறிவு (KNOWLEDGE ) இல்லாமல்   "சினிமா நடிகை பிறந்த நாளுக்கு 1000  EPOST  போடு"    "ரசிகர் மன்றம் நீயே  அமை"  என்றெல்லாம் கோமாளித்தனம் செய்யும் கீழ் மட்ட அதிகாரிகளை  உங்களுக்குத் தெரியவே தெரியாதா ?  இவையெல்லாம்  நம் துறையை  வளர்ச்சி பெற வைக்குமா ?  இது குறித்து சிந்திக்க வேண்டாமா ? 

பல ஆயிரக் கணக்கான  காலியிடங்களை நிரப்பவே வேண்டாமா ?  

காலியிடங்களை நிரப்ப போராடி  நடவடிக்கை எடுத்தாலும், தேர்வு முடிவுகள்  வெளி வருவதில்  ஆண்டுக் கணக்காக  ஆகிறதே ? இது சரி செய்யப் பட வேண்டாமா ?  

புதிய  வேலைகளுக்கு  அளவீடு  என்பது வேண்டாமா ? 

இப்படி எத்தனை  எத்தனையோ கேள்விகள் -   சாதாரண அடிப்படை ஊழியனின்  மனதில் - புத்தாண்டு  கேள்விகள் உண்டு !  இவற்றையும்  நிச்சயம் பரிசீலிக்க வேண்டிய கடமை நம்  நிர்வாகத்திற்கு உண்டு ! 

இந்த திசை நோக்கியும் பார்த்தால் மட்டுமே   நம்மால் இலாக்காவை  நினைக்கும் திசையில் , உரிய வேகத்தில் , கொண்டு செல்ல முடியும் ?  ஒரு திசைப் பார்வையில் "இலக்கு " "இலக்கு"  என்று  சாட்டையை சுழற்றினால்  அதில் பெறுவது  நிச்சயம்  வளர்ச்சியாக  இருக்காது . வீக்கமாகவே இருக்கும் .  செயற்கையான வீக்கம்  நோயின் அடையாளம் !

நாம் நோய் பெறப் போகிறோமா ? வளர்ச்சி பெறப் போகிறோமா ? என்பது 
நம் கையில் இருக்கவேண்டும் என்று நிர்வாகம் நினைப்பது போல , நிர்வாகமும் அப்படி  நினைக்கவேண்டும் என்று   இந்தத் துறையின்  ஊழியர்களான நாம்  நினைப்பதில் தவறு எதுவும் உண்டோ ?  சிந்திக்க வேண்டுகிறோம்.