அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Monday, 29 February 2016

SECRETARY GENERAL ,NFPE HAS TAKEN UP THE MATTER OF PROVISION OF FIVE DAYS WEEK IN OPERATIVE OFFICES

DEAR COMRADES,  

THOUGH THIS MATTER IS A COMMON ISSUE FOR ALL THE WORKING STAFF,  THIS WAS ASPIRED WELL BY OUR TAMILNADU COMRADES AND IN TURN OUR TAMILNADU P3 CIRCLE UNION HAS TAKEN UP THIS ISSUE WITH OUR ALL INDIA UNION. 

THIS BEING THE COMMON ISSUE,  OUR GENERAL SECRETARY, WHO IS ALSO OUR SECRETARY GENERAL, HAS INITIATED ACTION AND TAKEN UP THIS MATTER WITH OUR SECRETARY POSTS FOR CONSIDERATION OF OUR REQUEST, AS IN THE CASE OF  BANKING SECTOR, ADMINISTRATIVE OFFICES,  POSTAL ACCOUNTS AND IN LIC. 

ALSO, THIS IS NOW PROPOSED TO BE TAKEN UP WITH THE JCM DEPARTMENTAL COUNCIL MEETING .  HOPE WE WOULD ACHIEVE THE DEMAND, THOROUGH OUR CONTINUED AND SUSTAINED EFFORTS. 

சைபர் கிரைமில் பெண்/ ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனைகள் :




1. அச்சுறுத்தும்/ஆபாசமாக பேசும்
நபர்களை பிளாக் செய்யாதீர்கள்.
மாறாக , ரிபோர்ட் அப்யூஸ்(report
abuse) செய்யுங்கள்.


2. தொடர்பில் இருந்த
படியே காட்டி கொடுத்தால்.. புகார்
கொடுப்பாரை, வெளிக் காட்டாமலே,
சைபர் கிரைம் ஆக்க்ஷன் எடுக்கிறது.


3. மகிழ்ச்சியாக, தைரியமாக,
முகநூலை நல்லவற்றிற்கு பயன்
படுத்துங்கள்.


4. நம்முடைய அத்தனை பதிவுகள்,
லைக்ஸ், கம்மெண்ட்ஸ், போஸ்ட், Inbox
உரையாடல்கள் பதிவாகின்றது.
தேவை படும் போது தவறான
நபர்களை பிடித்துவிடலாம்.


சைபர் கிரைம் தொடர்பாக கீழ்க்கண்ட
இணையதளத்தில் சென்று புகார்
அளிக்கலாம்!



Sunday, 21 February 2016

FLOOD ADVANCE ORDER RELEASED BY PMG CCR ; INSTRUCTIONS OF CPMG , TN IN CMC MEETING

வெள்ள நிவாரண முன்பணம் வழங்க அணைத்து PMG களுக்கும் CPMG உத்தரவு --இந்த உத்தரவை பெற்றுத்தர  முன் முயற்சி மட்டுமல்ல முழு முயற்சியும் எடுத்து தந்த நம் மாநில செயலர் தோழர் J .இராமமூர்த்தி அவர்களுக்கு குமரி கோட்டத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் 

                                  கன்னியாகுமரிக்கும் உண்டு 


FLOOD ADVANCE ORDER RELEASED BY PMG CCR ; INSTRUCTIONS OF CPMG , TN IN CMC MEETING ; TEYNAMPET WATER PROBLEM

                                    NATURAL  CALAMITY  ADVANCE 

வெள்ள முன்பணம் வழங்கிட இன்று சென்னை பெருநகர மண்டலத்தில்  உத்திரவு வழங்கப்பட்டது. அதன் நகல் கீழே  காண்க .

இன்று நடைபெற்ற CMC  கூட்டத்தில்  நமது CPMG  அவர்கள் , அனைத்து மண்டல PMG க்களுக்கும் அவரது உத்திரவை அமல்படுத்திடுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும்  ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படை யில்   

                                              சென்னை பெருநகர மண்டலத்தில் 

1.  சென்னை  மாநகரம் / மாவட்டம் 
2.  காஞ்சிபுரம் மாவட்டம் 
3.  திருவள்ளூர்  மாவட்டம் 
4.  விழுப்புரம்  பகுதி 
5. பாண்டிச்சேரி  U /T 

ஆகிய பகுதிகளில் வசிப்பிடம் இருந்து வெள்ளம் பாதித்ததாக விண்ணப் பித்தவர்களுக்கும்....

மத்திய மண்டலத்தில் 

1. கடலூர்  மாவட்டம் 
2. நாகை மாவட்டம் 

ஆகிய பகுதிகளில் வசிப்பிடம் இருந்து வெள்ளம் பாதித்ததாக விண்ணப் பித்தவர்களுக்கும்....

தென் மண்டலத்தில் 

1. கன்னியாகுமரி மாவட்டம் 
2. தூத்துக்குடி மாவட்டம் 
3. திருநெல்வேலி மாவட்டம் 

ஆகிய பகுதிகளில் வசிப்பிடம் இருந்து வெள்ளம் பாதித்ததாக விண்ணப் பித்தவர்களுக்கும்....

முன்பணம்  உடனடியாக வழங்கிட அறிவுறுத்தியுள்ளார். 

இதர பகுதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கு  உரிய விசாரணை செய்து அதன் அடிப்படையில் வழங்கலாம்  என்று  அறிவுறுத்தியுள்ளார்.
======================================================================

தேனாம்பேட்டை ஊழியர்  குடியிருப்பு   
தண்ணீர் பிரச்சினை 

இன்று  காலை முதல்  VIDEO  CONFERENCE ,  அஞ்சல் வாரிய  உறுப்பினர் வருகை ,   அனைத்து PMGக்கள்  வருகை புரிந்த  CMC கூட்டம் என்று தொடர்ச்சியாக மாநில அதிகாரிகள் இருந்தபோதிலும் ,  நமது மாநிலச் சங்கத்தின் மூலம் தேனாம்பேட்டை ஊழியர் குடியிருப்பு  தண்ணீர் பிரச்சினை  குறித்து கடிதம் அளித்து   கீழ் மட்ட அதிகாரிகளிடம் பேசினோம். 

மேலும் CHIEF  PMG மற்றும்  PMG CCR  அவர்களையும் தொடர்பு கொண்டோம். இதன் மீது உடன்  நடவடிக்கை எடுத்திட  SSP  மத்திய கோட்டத்தை  அறிவுறுத்தியது மல்லாமல்  உடனடியாக  குடிதண்ணீர் மற்றும்  இதர தேவைகளுக்கான தண்ணீர் வழங்கிட  இரண்டு  MOTOR கள் வாடகை அடிப்படையில் பெற்று பொருத்திடுமாறு  உடன்  உத்திரவு அளித்துள்ளதாக  நம்மிடம்  இரு அதிகாரிகளும் தெரிவித்துள்ளார்கள். 

எனவே  SSP சென்னை மத்திய கோட்டம்  அவர்கள்  இனியும்  தனது பொறுப்பை  தட்டிக் கழித்திடாமல் (உடனடி தண்ணீர் வழங்கிட வாடகை MOTOR ஏற்பாடு செய்வதுகூட CHIEF PMG வேலை என்று கருதாமல்உடனடியாக  நடவடிக்கை எடுத்து, நாளையேனும்   பாதிக்கப்பட்ட ஊழியர் குடும்பங்களுக்கு   தண்ணீர்  வழங்கிட வேண்டுகிறோம்.  

காலிக் குடங்களுடன் சென்னை மத்திய கோட்ட அலுவலகத்தை முற்றுகையிடக் கிளம்பிய தாய்க் குலங்களை   CPMG  மற்றும் PMG CCR மீது  நம்பிக்கை வைத்து பிரச்சினையை  தீர்த்து வைப்பதாக  உறுதி கூறி  நமது சங்கம்தான் தடுத்து நிறுத்தியுள்ளது  என்பதை   சென்னை  மத்திய கோட்ட நிர்வாகி உணரவேண்டும்  என்பதையும்  அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப்  பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து  உடனடி நடவடிக்கை எடுத்திட  உத்திரவிட்ட  CPMG,TN  மற்றும்  PMG CCR  ஆகியோருக்கு நம் நன்றி  !


Monday, 8 February 2016

மாநிலச் சங்கத்தின் இடைவிடாத முயற்சிக்கு மாபெரும் வெற்றி !

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். 

நம்முடைய நீண்ட நாள் கோரிக்கை , காலாவதியான கணினி மற்றும் அதன் உபகரணங்கள் மாற்றப் படவேண்டும் என்பதே . இது கிட்டத்தட்ட நாடு முழுமைக்குமான பிரச்சினை என்றபோதிலும் நம்முடிய மாநிலச் சங்கம் தீவிர முயற்சி எடுத்து RJCM , FOUR  MONTHLY MEETING  களில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்று 2012-13, 2013-14 மற்றும் 2014-15 ஆண்டுகளில் அனைத்து கோட்டங்களில் இருந்தும் CONDEMNATION REPORT  பெற்று  அதன் அறிக்கை DIRECTORATE க்கு அனுப்பப்பட்டது உங்களுக்கு  பலமுறை  வலைத்தளம் மூலம் செய்தியாக  தெரிவித் திருந்தோம்.

மேலும் இதன் மீது அழுத்தம் கொடுத்திட  கடந்த 16.12.2014 JCM  இலாக்கா குழு  கூட்டத்தில் இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு  அதற்கான உரிய பதிலும் பெறப்பட்டது. 

இருந்தபோதிலும்  சரியான நடவடிக்கை இல்லாததால் கடந்த 26.3.2015 ஒரு நாள்  மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் நடத்தி அதில் இந்தக் கோரிக்கை பிரதான கோரிக்கையாக வைக்கப்பட்டது. 

மேலும் நம் மாநிலச் செயலர் , அகில இந்திய சங்கத்தின்  தலைவரான வுடன்  நம்முடைய அகில இந்திய சங்கத்தின் மூலம் கடந்த    13.6.2015 மற்றும்  24.11.2015 தேதிகளில்  துறை முதல்வருக்கு கடிதம் அளித்து பேசினோம். இதன் தொடர்ச்சியாக கடந்த 23.12.2015 அன்று  இலாக்கா , டெக்னாலஜி பிரிவிற்கு  உடன் நடவடிக்கை கோரி அறிவுறுத்தியது. 

தற்போது  கடந்த 12.1.2016இல்  நம்முடைய பொதுச் செயலருக்கு ஏற்கனவே  CONDEMN  செய்யப்பட  கணினி மற்றும் அதன் உபசாதனங்கள் மாற்றிட  SUPPLY  ORDER  வைக்கப் பட்டுள்ளதாக  எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளது.  இவையெல்லாம் தமிழக அஞ்சல் வட்டத்திற்கு மட்டுமே . 

மேலும் இதன் அடிப்படையில் , தற்போது  கடந்த 2012-13, 2013-14 நிதி ஆண்டுகளில்  CONDEMNATION  REPORT  அளிக்கப் பட்ட கோட்டங்களில்   கணினிகள் புதிதாக REPLACE  செய்யப் பட்டு வருகின்றன என்பது நமது தமிழக  அஞ்சல் மூன்று சங்கத்தின்  இடைவிடாத முயற்சிக்கு கிடந்த வெற்றியாகும் . 

அப்படி   கடந்த  ஆண்டுகளில் SCRAP செய்யப்பட அளிக்கப்பட்ட பரிந்துரைப்படி , புதிய கணினிகள்  வழங்கப்படாத  கோட்டங்கள் இருப்பின்  உடன்  அந்தந்த  கோட்ட  கண்காணிப்பாளர்களை  கோட்டச் செயலர்கள் அணுகிட வேண்டுகிறோம். 

இதனை  வேறு  எவரின் முயற்சியாலோ கிடைத்தது என்று  சிலர்  நம் சங்க  உறுப்பினர்களிடையே பிரச்சாரம்  செய்திட இடம் கொடுக்க வேண்டாம்  என்று  அன்போடு கேட்டுக் கொள்கிறோம். 

அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும்  இந்த செய்தியை  கீழ் மட்ட உறுப்பினர்களிடம்  கொண்டு செல்ல வேண்டும்  என்றும்  கேட்டுக் கொள்கிறோம்.  இதன் மூலம்  நம் சங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தி எதிர்வரும்  ஏப்ரல் திங்களில் மேலும் நம் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை  பலப்படுத்திட வேண்டுகிறோம்.  நம் சங்கத்தின்   இடை விடாத செயல்பாடுகளை  கீழ் மட்டம் வரை  கொண்டு செல்ல வேண்டு கிறோம்.