அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.
நம்முடைய நீண்ட நாள் கோரிக்கை , காலாவதியான கணினி மற்றும் அதன் உபகரணங்கள் மாற்றப் படவேண்டும் என்பதே . இது கிட்டத்தட்ட நாடு முழுமைக்குமான பிரச்சினை என்றபோதிலும் நம்முடிய மாநிலச் சங்கம் தீவிர முயற்சி எடுத்து RJCM , FOUR MONTHLY MEETING களில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்று 2012-13, 2013-14 மற்றும் 2014-15 ஆண்டுகளில் அனைத்து கோட்டங்களில் இருந்தும் CONDEMNATION REPORT பெற்று அதன் அறிக்கை DIRECTORATE க்கு அனுப்பப்பட்டது உங்களுக்கு பலமுறை வலைத்தளம் மூலம் செய்தியாக தெரிவித் திருந்தோம்.
மேலும் இதன் மீது அழுத்தம் கொடுத்திட கடந்த 16.12.2014 JCM இலாக்கா குழு கூட்டத்தில் இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு அதற்கான உரிய பதிலும் பெறப்பட்டது.
இருந்தபோதிலும் சரியான நடவடிக்கை இல்லாததால் கடந்த 26.3.2015 ஒரு நாள் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் நடத்தி அதில் இந்தக் கோரிக்கை பிரதான கோரிக்கையாக வைக்கப்பட்டது.
மேலும் நம் மாநிலச் செயலர் , அகில இந்திய சங்கத்தின் தலைவரான வுடன் நம்முடைய அகில இந்திய சங்கத்தின் மூலம் கடந்த 13.6.2015 மற்றும் 24.11.2015 தேதிகளில் துறை முதல்வருக்கு கடிதம் அளித்து பேசினோம். இதன் தொடர்ச்சியாக கடந்த 23.12.2015 அன்று இலாக்கா , டெக்னாலஜி பிரிவிற்கு உடன் நடவடிக்கை கோரி அறிவுறுத்தியது.
தற்போது கடந்த 12.1.2016இல் நம்முடைய பொதுச் செயலருக்கு ஏற்கனவே CONDEMN செய்யப்பட கணினி மற்றும் அதன் உபசாதனங்கள் மாற்றிட SUPPLY ORDER வைக்கப் பட்டுள்ளதாக எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளது. இவையெல்லாம் தமிழக அஞ்சல் வட்டத்திற்கு மட்டுமே .
மேலும் இதன் அடிப்படையில் , தற்போது கடந்த 2012-13, 2013-14 நிதி ஆண்டுகளில் CONDEMNATION REPORT அளிக்கப் பட்ட கோட்டங்களில் கணினிகள் புதிதாக REPLACE செய்யப் பட்டு வருகின்றன என்பது நமது தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் இடைவிடாத முயற்சிக்கு கிடந்த வெற்றியாகும் .
அப்படி கடந்த ஆண்டுகளில் SCRAP செய்யப்பட அளிக்கப்பட்ட பரிந்துரைப்படி , புதிய கணினிகள் வழங்கப்படாத கோட்டங்கள் இருப்பின் உடன் அந்தந்த கோட்ட கண்காணிப்பாளர்களை கோட்டச் செயலர்கள் அணுகிட வேண்டுகிறோம்.
இதனை வேறு எவரின் முயற்சியாலோ கிடைத்தது என்று சிலர் நம் சங்க உறுப்பினர்களிடையே பிரச்சாரம் செய்திட இடம் கொடுக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் இந்த செய்தியை கீழ் மட்ட உறுப்பினர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் நம் சங்கத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தி எதிர்வரும் ஏப்ரல் திங்களில் மேலும் நம் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை பலப்படுத்திட வேண்டுகிறோம். நம் சங்கத்தின் இடை விடாத செயல்பாடுகளை கீழ் மட்டம் வரை கொண்டு செல்ல வேண்டு கிறோம்.
No comments:
Post a Comment