MINUTES COPY OF THE MEETING ON RULE 38 TRANSFERS CONTAINING ENTIRE RULE 38 TRANSFERS IN TAMILNADU CIRCLE
சும்மா வருவதல்ல சுதந்திரம்
நம்முடைய அஞ்சல் மூன்று சங்கத்தின் விடா முயற்சி காரணமாக கடந்த 15.5.2013 முதல் மூன்று ஆண்டுகளாக தேங்கிக்கிடந்த விதி 38 ன் கீழான இடமாறுதல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கிட்டத்தட்ட 200 எழுத்தர்களுக்கு இடமாறுதல் உத்திரவு தற்போது அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து RJCM கூட்டத்தில் நம்மால் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டு வந்ததும், கேடர் சீரமைப்பு உத்திரவு காரணமாக CPMG அவர்கள் இதனை செய்ய இயலாது என்று பதில் அளித்ததும் உங்களுக்குத் தெரியும் .
இதற்கான RJCM MINUTES பதிவு ஏற்கனவே நம் மாநிலச் சங்க வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்தனையும் தாண்டி இன்று நாம் இந்த உத்திரவை பெற்றுள்ளோம்.
இந்த உத்திரவை அளிக்க இறுதியாக முடிவெடுத்து கடந்த 21.9.2016 அன்று அதற்கான கூட்டத்தை கூட்டிய நம்முடைய CPMG, DR . சார்லஸ் லோபோ அவர்களுக்கு நம்முடைய மாநிலச் சங்கத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
முழுமையான MINUTES பதிவு கீழே பார்க்கவும் :-
No comments:
Post a Comment