அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Wednesday 26 April 2017

முக்கிய செய்தி -கேடேர் சீரமைப்பு உத்தரவுகள் நிறுத்திவைப்பு ........

 ஊழியர் தரப்பு கோரும் மாற்றங்களை ஆராய தனி குழு அமைப்பு ....

மத்திய --மாநில சங்கங்களுக்கு நன்றி 
அஞ்சல் எழுத்தர்கள் மத்தியில் குறிப்பாக மூத்த தோழர்கள் மத்தியில் இருந்த ஒருவித பீதி களையப்பட்டு நிம்மதி பெருமூச்சோடு இன்று இருப்பதை பார்க்கிறோம் .பதவி உயர்வு என்ற பெயரால் உலாவந்த அச்சங்கள் இன்று விலக தொடங்கியிருக்கிறது.  கோட்ட மட்டங்களில் ஒரு பக்கம் சுழல் மாறுதல் -மறுபக்கம் கேடெர் சீரமைப்பு பணிகள் -இந்த குழப்பங்களுக்கு இன்று விடைகிடைத்திருக்கிறது. கேடெர் சீரமைப்பு நமது தலைவர்களின் கனவு திட்டம் தான் ஐயமில்லை .ஆனால் அதை அமுல் படுத்த தொடங்கும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களை கணக்கில் கொள்ளாமலும் இல்லை .இந்த அடிப்படையில் நடைபெற்ற நமது மத்திய சங்க செயற்குழுவில் (08.03.2017 முதல் 09.03.2017 வரை சட்டிஸ்கர் ) கேடெர் சீரமைப்பு குறித்து எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் நாம் கேட்கும் மாறுதல்களை பட்டியலிட்டு கோரிக்கைமனுவினை கடந்த 17.03.2017 அன்று நமது இலாகா முதல்வரை சந்தித்து வழங்கினார்கள் .இதற்கிடையே 18.03.2017 அன்று நமது NFPE சம்மேளனம் சார்பாகவும் விளக்கமான கடிதங்கள் கொடுக்கப்பட்டன .இதற்கிடையில் சில மாநிலங்களில் நிர்வாகம் காட்டிய வேகம் மேலும் ஊழியர்களை திகிலடைய செய்தது .நமது மாநில சங்கமும் தன் பங்கிற்கு மத்திய சங்கத்தையும் -மாநில நிர்வாகத்தையும் ஊழியர்களை பாதிக்காத வண்ணம் அமுல் படுத்த வேண்டும் என வற்புறுத்திவந்தது .இந்நிலையில் நமது அகிலஇந்திய பொதுச்செயலர் 25.04.2017 அன்று நமது இலாகா முதல்வரை சந்தித்து ஊழியர் தரப்பு கோரும் மாற்றங்களை செய்யாமல் அமுல்படுத்தினால் பெரிய பாதிப்பு வரும் என்றும்  பெயரளவிற்கு தான் பதவிஉயர்வு இருக்குமே தவிர பெரும்பாலான .ஊழியர்கள் பதவி உயர்வை மறுக்கத்தான் செய்வார்கள் என எடுத்துரைத்தார் .உண்மை நிலையை உணர்ந்துகொண்ட நமது இலாகா முதல்வர் அவர்கள் தற்சமயம் இதை அமுல்படுத்துவதை நிறுத்திவைக்க உத்தரவிட்டார்கள் .ஊழியர்களின் உணர்வை புரிந்து செயல்பட்ட மத்திய சங்கத்திற்கும் மாநில சங்கத்திற்கும் நமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
நாம் கோரியுள்ள பிரதான மாற்றங்கள் 
1.LSG பதவிகள் கோட்ட மட்ட பதவிகளாக அறிவிக்க படவேண்டும் 
2.LSG TO HSG II மற்றும் HSGII TO HSG I பதவிஉயர்வுக்கான கால இடைவெளி நீக்கப்பட்டு ONETIME MEASURE அடிப்படையில்  பதவி உயர்வுகள் வழங்க வேண்டும் .
அதுவரை கேடேர் சீரமைப்பு உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது 
இது குறித்து நமது மத்திய சங்கம் கொடுத்துள்ள செய்திகளை பார்ப்போம் 


CADRE RESTRUCTURING IMPLEMENTATION DEFERRED

GDS DA ORDERS

No comments:

Post a Comment