அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Friday, 11 March 2016

DTE INSTRUCTED ALL CIRCLES TO RECALCULATE THE VACANCIES TAKING INTO ACCOUNT THE RESIDUAL VACANCIES, LR ETC.

ATTENTION TO DIVISIONAL/ BRANCH SECRETARIES ! 

 NOW OR NEVER ! ACT SWIFTLY !

ஏற்கனவே  4.3.2016 அன்று நடைபெற்ற RJCM  கூட்ட முடிவுகள் என்ற தலைப்பில் அனைத்து கோட்டங்களிலும் உள்ள ஏற்கனவே விடுபட்ட  RESIDUAL  VACANCY , LR VACANCY , LSG  பதவி உயர்வினால் ஏற்பட்ட காலியிடங்கள், CURRENT  YEAR VACANCY   உள்ளிட்ட அனைத்து காலியிடங்களையும் எதிர்வரும் 31.3.2016 க்குள்  கணக்கில் கொண்டுவந்து அறிவித்திட  JCM  இலாக்கா  குழு கூட்ட முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்,  எனவே  உடன் அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களும் தங்கள் கோட்டங்களில் காலியிடங்கள் சரியாக எடுக்கப்பட்டு  CPMG  க்கு REPORT  அனுப்பப்படுகிறதா என்பதை சரிபார்க்கவும் என்று நாம்  கோரியிருந்தோம்.

கோட்ட நிர்வாகத்தில் இதுபற்றி உங்களுக்குத் தகவல் தெரிவிக்க மறுத்தால் , தகவல் அறியும்  உரிமைச் சட்டத்தின் கீழ்  உரிய தகவல்களை கேட்டு பெறவும்  மாநிலச் சங்கம் அறிவுறுத்தியிருந்தது .  

இந்த செய்தி அனைவரும் அறியும் வண்ணம்  நம்முடைய வலைத்தளம் , கோட்ட/ கிளைச் செயலர்களின் EMAIL, மற்றும் முகநூல் ஆகியவற்றின் மூலம் தெரிவித்திருந்தோம். 

தற்போது இலாக்கா முதல்வர்  இது குறித்து அளித்த உத்திரவின்  நகல், நமது பொதுச் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை  பொதுச் செயலர்  மாநிலச் செயலருக்கு அனுப்பியுள்ளார். 

எனவே அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும்  உடனே செயல்பட வேண்டுகிறோம் .  ஏனெனில் இதுவே கடைசி வாய்ப்பு . 

இன்னொரு முறை  2005 முதல் 2008 வரையான RESIDUAL  காலியிடங்கள் REASSESS  செய்திட இலாக்காவிடம் இருந்து உத்திரவு பெற முடியாது. நீங்கள் கண்காணிக்கவில்லை எனில் , இதுநாள்  வரை  அனுப்பிய REPORT  போல உங்கள் கோட்டத்தில் இருந்து  ASSESSMENT  சரியாக செய்திடாமல் மீண்டும்  குறைவான எண்ணிக்கையில்  காலியிடங்கள் அறிவிக்கப்படலாம். இனி  SHORTAGE  OF  STAFF  என்ற  குரல்  தமிழக அஞ்சல் வட்டத்தில்  இருக்கக்கூடாது என்ற நிலையை  உருவாக்க வேண்டுகிறோம். 

கீழே பார்க்க,  நம்மால் JCM  DEPARTMENTAL COUNCIL கூட்டத்தில்  வைக்கப் பட்ட SUBJECT  க்கு  கொடுக்கப்பட்ட இலாக்காவின் பதிலை .

No comments:

Post a Comment